கடந்த வருடங்களில்
அனைத்திலும் நடந்த
யாவையும் மறந்து 💜🔥
நேற்று வரை
மனக்கசப்பு , கஷ்டம் ,
கவலை யாவும் பூத்து
உதிர்ந்த மலராய் 💜🔥
இன்று தொடங்கும் புது
வருடத்தில் புதிதாய் பிறந்த
மழலையாய் புன்னகையுடன் 💜🔥
சுட்டெரிக்கும் சூரியனையும்
சக்கரை பொங்கலிட்டு 💜🔥
பலவிதமான மனிதரை
பலவிதமான எண்ணங்களை
பலவிதமான உணர்வுகளை
சிரித்தே கடந்து 💜🔥
பலவிதமான கனிகளை
இறைவனுக்கு படைத்து 💜🔥
நீண்ட ஆயுளும்
நிறை செல்வமுமாய்
மனநிம்மதியுடன் 💜🔥
சித்திர குப்தனை வணங்கி
தித்திக்கும் சித்திரையை
சிறப்புடனே வரவேற்போம் 💜🔥
அனைவருக்கும் #சித்திரை
திருநாள் நல்வாழ்த்துகள் 💜🔥
கருத்துகள்
கருத்துரையிடுக