முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இனிய பராபவ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சமீபத்திய இடுகைகள்

ஆக்ஸ்கே தமிழ்... புதிய பெயர்... புதிய இலச்சினை...

  புதிய பெயருடன் புதிய இலச்சினையுடன் தமிழ் வலைப்பூ தொடர்கிறது. இந்த வலைப்பூவின் முகவரி tamil.oxk.in

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...

உழவர் திருநாளாம் மாட்டுப் பொங்கல்

💐💐💐🙏🏻🌹🌹🌹🌹🌹 *"இன்றைய சிந்தனை"*.( 16.01.2026 ) ............................... *"’’..* .................................. உழவர் தினம் (மாட்டுப் பொங்கல்) என்பது தைப்பொங்கலின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும்.  உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும்.  மாட்டுப் பொங்கலின் அன்று வேளாண்மைக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கால் நடைகளை குளிப்பாட்டுவர்.  மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி விடுவார்கள்.  கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள்.   புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக் கயிறு , உழவுக் கருவிகளை சுத்தம் ...

எது தவறு?

_*1 : பேசுவது தவறல்ல,*_ _தேவையற்றதைப் பேசுவது மிகவும் தவறு..!_  _*2 : ஆசைப்படுவது தவறல்ல,*_  _பேராசை கொள்வது பெரும் தவறு....!!_  _*3 : கோபம் கொள்வது தவறல்ல,*_  _நியாயமற்றக் கோபம் மாபெரும் தவறு...!!_ _*4 : அறியாமை தவறல்ல,*_ _அறிந்துக் கொள்ள முயலாமை முற்றிலும் தவறு...!!_ _*5 : வீழ்வது தவறல்ல,*_ _எழ முயற்சி செய்யாமல் வீழ்ந்தே கிடப்பது தவறிலும் தவறு...!!_ _*6 : தவறிச் செய்வது தவறு.*_ _தவறு எனத் தெரிந்தப் பின் திருத்திக் கொள்ளாதது மாபெரும் தவறு...!!_ _*7 : நாம் செய்யும் தவறை*_ _நம்மைச் சார்ந்தோர் சொல்வதைக் கேட்காமல் அவர்களையே (நீங்கள் யார் என்னைக் கேட்க) என்பது மிகப் பெரிய தவறு...!!_ _*8 : நம் தவறை நம் குடும்பத்தார்* அம்மா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி பிள்ளைகள் நண்பர்கள் எடுத்து உரைத்தால் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொண்டால் நமக்குத் தான் நன்மை...!!_

டிசம்பர் - 06: அம்பேத்கர் நினைவு நாள்.

* * எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ... எவன் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ... எவன் ஒருவன் அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்றிருக்கிறானோ...  அவனே சுதந்திரமான மனிதன் என்பேன். *-டாக்டர் அம்பேத்கர்*